‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமால் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக டோட்டல் தமால் படம் உருவாக உள்ளது. அஜய் தேவ்கன், அனில் கபூர், மாதுரி தீட்சித், அர்சத் வர்ஷி, ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். இந்திர குமார் இயக்க, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் மாருதி இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டோட்டல் தமால் படம் அடுத்தாண்டு டிச., 7-ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்றைய தினம் அமீர்கானின் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் வெளியாக இருப்பதால் தேவையில்லாமல் போட்டி ஏற்படுவதுடன் போதிய தியேட்டர் கிடைக்காது என்பதாலும் வசூல் பாதிக்கும் என்பதாலும் போட்டியிலிருந்து விலகிவிட்டனர்.