போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஒருவழியாக ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடித்துள்ள 2.0 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 27 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு முன் இப்படம் ஜனவரி 26 ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது ரிலீஸ் தேதியை மீண்டும் மாற்றி உள்ளனர். ஷங்கர் இயக்கி உள்ள இப்படத்தை லைக்கா புரோடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
ஆனால் 2.0 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் தான் கங்கனா நடித்துள்ள மனிகார்னிகா - தி க்யூன் ஆப் ஜான்சி படமும், டைகர் ஷரோப் நடித்துள்ள பாகி 2 படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று முக்கிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2.0 படம் கங்கனா மற்றும் டைகர் படங்களுடன் மோத உள்ளது.