‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அமெரிக்காவின், ஏ.பி.சி., டிவி சேனலில் ஒளிபரப்பாகும் குவாண்டிகோ தொடரில் நடிப்பதால், பிரியங்கா சோப்ராவுக்கு, அங்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
இப்போதெல்லாம், பாலிவுட் ரசிகர்களை விட, அமெரிக்காவில் உள்ள ரசிகர்களுக்கு தான், முக்கியத்துவம் கொடுக்கிறார், பிரியங்கா. குவாண்டிகோ தொடரில், அலெக்ஸ் பாரிஸ் என்ற பெயரில், புலனாய்வு துறை அதிகாரியாக நடிக்கிறார், பிரியங்கா. அவரது அதிரடி நடிப்பு, அமெரிக்க ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், பிரியங்காவை எங்கு பார்த்தாலும், 'அலெக்ஸ்' என, செல்லமாக அழைக்கின்றனர். அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போன பிரியங்கா, 'இவர்கள் காட்டும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்' என, கண்களை கசக்குகிறாராம்.