‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகி 2 படத்தில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தில் நடிகர் டைகர் ஷரோப், அப்பா வேடத்தில் நடிக்கிறாராம். அதுவும் 7 வயது பெய் குழந்தைக்கு அப்பாவாக நடிக்க உள்ளாராம்.
என்ஆர்ஐ ஒருவருக்கு கடந்த காலத்தில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. பிற்காலத்தில் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது தெரிய வருகிறது. தந்தை - மகள் எப்படி இணைகிறார்கள், அவர்கள் இடையேயான அன்பை பற்றியது தான் பாகி 2 படத்தின் கதை. இப்படத்தை அகமது கான் இயக்குகிறார். சாஜித் நதியாவாலா இப்படத்தை தயாரிப்பதுடன், முக்கிய வேடம் ஒன்றிலும் நடிக்கிறாராம். இவர்களுடன் திஷா படானியும் இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் 2018 ம் ஆண்டு ஏப்ரல் 27 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.