பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெக்ஹரா. ரங்கு தே பாசந்தி, பாக் மில்கா பாக் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர், அடுத்தப்படியாக "கபாடி" என்றொரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஹிருத்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்க இருக்கையில், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. ஆனால் இதை ராகேஷ் ஓம் பிரகாஷ் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... "அந்த மாதிரி எதுவும் கிடையாது. இந்த மாதிரி செய்தியை கேட்டு நான் ஆச்சர்யப்பட்டேன். மீடியாக்களுக்கு அனைத்தும் தெரியும் என நினைக்கிறேன். அடுத்தமுறை, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மீடியாக்களிடம் கேட்டு செய்கிறேன்" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
கபாடி படத்தை ரோனி ஸ்குரூவாலா தயாரிக்க உள்ளார். அடுத்தாண்டு இப்படம் ஆரம்பமாக உள்ளது.