ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
'வெண்ணிலா கபடி குழு'வில் தொடங்கி கபடி போட்டியை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்து விட்டது. அந்த வரிசையில் வருகிற 23ம் தேதி வெளியாகும் படம் 'கபடி ப்ரோ'. இதனை அஞ்சனா சினிமாஸ் சார்பில் உஷா சதீஷ் தயாரிக்கிறார், சதீஷ் ஜெயராமன் இயக்குகிறார். சுஜன், பிரியா லால், சிங்கம்புலி, சஞ்சய் வெள்ளங்கி, மதுசூதனராவ், ஹானா, மனோபாலா, சண்முக சுந்தரம், மீரா கிருஷ்ணன், அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜே.டேனியல் இசை அமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சதீஷ் ஜெயராமன் கூறியதாவது: சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் கதை. அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும், சக்தியும் உள்ளனர். இவர்கள் மூவரும் 'பாயும் புலி' எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர். இந்நிலையில் வீரபாகுவும் அந்த ஊரின் காவல்துறை அதிகாரி இசக்கி பாண்டியனின் மகள் அபிராமியும் காதல் கொள்கின்றனர். இதனால் இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான். பின்பு நடந்தது என்ன ..? கபடி போட்டியிலும் காதலிலும் வீரபாகு வென்றானா என்பதே கதை. என்றார்.