போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
லட்சுமி ராய், பாலிவுட்டில் படு கவர்ச்சியாக நடித்துள்ள படம் ஜூலி-2. தீபக் ஷிவ்தாசினி இயக்கியுள்ளார். சமீபத்தில் ஜூலி-2 படத்தின் டிரைலர் வெளியானது. இதில் பிகினி, முத்தக்காட்சி, என படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தமாதம் வெளியாக இருக்கும் நிலையில் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் லட்சுமி ராய். சமீபத்தில் ஒரு பேட்டியின் போது இவ்வளவு கவர்ச்சியாக நடித்திருக்கிறீர்களே, உங்கள் வீட்டில் எதுவும் சொல்லவில்லையா என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த லட்சுமி ராய், ஜூலி 2 படத்தை என் தந்தை பார்த்தார். இப்படம் எப்படி இருக்கிறது, ஏன் இப்படி நடித்துள்ளாய் என்று எதுவும் என்னிடம் கேட்டதில்லை. நானும் அவரிடம் இதுப்பற்றி எதுவும் சொல்லவில்லை, ஆனால் படத்தை பார்த்துவிட்டு அது எடுக்கப்பட்ட விதம் குறித்து பாராட்டு மட்டும் தெரிவித்தார் என்றார்.