நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
பாலிவுட்டிலும் சரி, கோலிவுட்டிலும் சரி; ஒரு நடிகை, சக நடிகையை பாராட்டுவது என்பது, மிகவும் அரிதான விஷயம். ஆனால், இந்த விஷயத்தில், பாலிவுட்டில் சமீபகாலமாக நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், சக நடிகை பிரியங்கா சோப்ராவை பாராட்டி தள்ளியுள்ளார், சோனாக் ஷி சின்ஹா.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு, நல்லெண்ண துாதராக, பிரியங்காவை நியமித்துள்ளது, ஐ.நா., சபை. அங்கு, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் பணியில், பிரியங்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, சோனாக் ஷி சின்ஹா, 'சம்பாதித்தோமா; தலைமுறைக்கு சொத்து சேர்த்தோமா என, சுயநலமாக செயல்படுவோர் மத்தியில், பொது நலத்துடன் செயல்படும் பிரியங்காவை, எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெண்மைக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார், அவர். எனக்கும் வாய்ப்பு கிடைத்தால், இது போன்ற பொதுநல பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வேன்' என, உருக்கமாக கூறியுள்ளார்.