ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது சிம்ரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக இருப்பதால் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அத்துடன் அடுத்தப்படியாக தான் நடிக்கும் ராணி லட்சுமிபாயின் வேடமாக மனிகர்னிகா படத்திலும் பிஸியாக உள்ளார். கங்கனா, தேஜூ என்ற படத்தின் மூலம் விரைவில் இயக்குநராக அவதரிக்க உள்ளார்.
இதுகுறித்து கங்கனா கூறியதாவது, என்னுடைய தேஜூ படம் குழந்தைகள் படமாக உருவாகிறது. இது காமெடி படம் என்று சொல்ல மாட்டேன். ஒரு உணர்வுப்பூர்வமான படம். குழந்தைகளை வைத்து படம் இயக்குவதால் நிச்சயம் எனக்கு சவால்கள் இருக்கும். குழந்தைகளை வைத்து படம் இயக்க நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். மனிகர்னிகா படத்தை முடித்ததும் தேஜூ படம் உருவாகும் என்றார்.
தேஜூ படத்தில், கங்கனா 80 வயது பாட்டியாக நடிக்க இருக்கிறார் என்பது ஹைலைட்!