‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தியா, பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனையை மையமாக வைத்து பாலிவுட்டில் "பரமானு தி ஸ்டோரி ஆப் பொக்ரான்" என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. இதில் ஜான் ஆபிரஹாம், ராணுவ வீரராக நடித்து வருகிறார். அபிஷேக் சர்மா இயக்க, ஜான் ஆபிரஹாம் மற்றும் கிரிராஜ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில், இப்போது புதிதாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ராணுவ வாகனங்களின் பின்னணியில் ஜான் ஆபிரஹாம் ஓடி வருவது போன்று போஸ்டர் உள்ளது. போஸ்டரில் படத்தை தலைப்பை பெரிதாக வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தாண்டு டிச., 8-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.