‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் முத்தமன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. அவரின் படங்களில் அவருக்கு ஒரு முத்தக்காட்சியாவது இடம் பெற்றுவிடும். ஆனால் இப்போது தான் நடித்துள்ள பாத்சாகோ படத்தில் தனக்கு முத்தக்காட்சி இல்லை என்று ஏக்கத்தோடு தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இம்ரான் ஹாஸ்மி, "பாத்சாகோ படத்தில் நான் எந்த நடிகையுடன் முத்தக்காட்சியில் நடிக்கவில்லை, படத்தில் எனக்கு ஒரு முத்தக்காட்சி கூட கிடையாது. அஜய் தேவ்கன் தான் முத்தக்காட்சியில் எல்லாம் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக கடந்த ஓராண்டாகவே நடித்து வருகிறேன். ஆகையால் சினிமாவில் ஓராண்டாகவே நான் யாரையும் முத்தமிடவில்லை" என்கிறார்.
பாத்சாகோ படத்தை மிலன் லுதிரா இயக்கியுள்ளார். இம்ரான் உடன் அஜய் தேவ்கன், வித்யூத் ஜம்வால், இலியானா, இஷா குப்தா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற செப்., 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது.