தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த படம் ஜப் ஹாரி மெட் சாஜல். இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் வசூலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான மூன்று நாட்களில் வெறும் ரூ.46 கோடி தான் வசூலத்திருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஷாரூக்கான் படங்களின் வசூல் மிக குறைந்த வசூல் இது தான் எனும் அளவுக்கு இப்படம் மோசமான விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது.
இதுகுறித்து ஷாரூக்கான் கூறியிருப்பதாவது... "இம்தியாஸ் அலியின் முந்தைய படங்களை நான் பார்த்தது கிடையாது. படத்தின் கதையை நம்பினேன், மக்களும் ஏற்று கொள்வார்கள் என முழுமையாக நம்பினேன். இருந்தாலும் தற்போதைய சூழலில் ஜப் ஹாரி படம், மக்களிடத்தில் மெதுவாய் தான் போய் சேரும்" என்கிறார்.