‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபகாலமாக வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அக்ஷ்ய் குமார், தற்போது தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் படமான டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பேடுமேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அக்ஷ்ய் குமாருடன், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். பால்கி இயக்க, டுவிங்கிள் கண்ணா தயாரித்திருக்கிறார். சானிட்டரி நாப்கினை குறைந்த செலவில் தயாரிக்க இயந்திரம் கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தமின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து இருக்கிறது. அதன்படி, இப்படம் அடுத்தாண்டு ஏப் 13ம் தேதி ரிலீஸாக உள்ளது.