போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி உள்ளது. இதில் ஹசீனா ரோலில் ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். அபூர்வா லக்கியா இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு ரெடியாகிவிட்டது. இப்படம் முதலில் ஜூலை 14-ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. பின்னர் ஆகஸ்ட் 18-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இப்போது இந்த தேதியிலும் படம் ரிலீஸாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் அபூர்வா கூறுகையில், "ஹசீனா படத்திற்கு போதி திரையரங்குகள் கிடைக்கவில்லை. நிறைய திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவே படத்தை தள்ளி வைத்துள்ளோம். இன்னும் தேதி முடிவாகவில்லை" என்று கூறியுள்ளார்.