இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
பாலிவுட்டில் சிபாரிசு என்ற விஷயம் பெரிய விவாதமாக போய் கொண்டிருக்கிறது. பல திரைப்பிரபலங்கள் இந்த விஷயம் பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வித்யாபாலனிடமும், இந்த சிபாரிசு பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது....
சிபாரிசு தொடர்பான விஷயத்தில் கருத்து கூறும் அனைவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதேசமயம் சிபாரிசு சிபாரிசு என்று அதைப்பற்றியே பேசும்போது மிகவும் போரடிக்கிறது. செய்திதாளை எடுத்து படித்தால் கூட அங்கும் இந்த செய்தியை தான் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த விஷயத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை, இதுப்பற்றிய விவாதித்திலும் நான் பங்கேற்க விருப்பமில்லை. சிபாரிசு... சிபாரிசு என்று கேட்டு போரடித்துவிட்டது. அட போதும்பா விடுங்க.... என்கிறார்.