‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டில் வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். தற்போது இவர், குஷண் நந்தி இயக்கத்தில் பாபுமோஷை பாண்டுகபாஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் விழா மும்பையில் நடந்தது. முதன்முறையாக நவாசுதீன் முத்தக்காட்சி உட்பட நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார். இதுப்பற்றி நவாசுதீனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது...
உண்மை தான் முதன்முறையாக நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறேன். இப்படியொரு காட்சியில் நடிக்கும் போது எனக்கு பயமாகவும், தயக்கமாவும் இருந்தது. இந்தகாட்சியில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, முழுக்க முழுக்க அந்தக்காட்சியில் ஒன்றி நடிக்க வேண்டும் என்றார்.