'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஸ்ரீதேவி தன் மகள் ஜான்வியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார் என்றும், தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார் என்றும் சொன்னார்கள். ஆனால், ஸ்ரீதேவி தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாகவும் அறிமுகமான தமிழ்த் திரையுலகிலோ, அல்லது புகழையும், பணத்தையும் அதிகமாக சம்பாதித்த தெலுங்குத் திரையுலகத்திலோ அறிமுகப்படுத்தப் போவதில்லையாம்.
ஸ்ரீதேவிக்கு பெயரையும், புகழையும், பணத்தையும், குடும்ப வாழ்க்கையையும் கொடுத்த ஹிந்தித் திரையுலகத்தில்தான் அறிமுகப்படுத்த உள்ளார் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தித் திரையுலகின் பிரபல இயக்குனரான கரண் ஜோஹர் இயக்கத்தில் தான் ஜான்வி கபூர் அறிமுகமாகிறார் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் தனது தயாரிப்பில் மூன்று படங்களுக்கு நாயகியாக கரண் ஒப்பந்தம் செய்துள்ளார் என்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு கூட நாகார்ஜுனாவின் மகன் அகில் ஜோடியாக ஜான்வி நடிக்க உள்ளார் என்று வந்த செய்தியைக் கூட நாகார்ஜுனா மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்வி ஹிந்தியில் அறிமுகமானால் நிச்சயம் தென்னிந்தியப் பக்கம் வரமாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.