‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் உலகம் முழுவதும் சுமார் 9000 தியேட்டர்களில் திரையிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இந்தியாவில் மட்டும் சுமார் 6500 தியேட்டர்களில் வெளியிட்டார்கள்.
'பாகுபலி 2' படம் பற்றி எதுவுமே பேசாத சில பாலிவுட் நடிகர்கள் 'பாகுபலி 2' படத்தின் தியேட்டர் எண்ணிக்கையை மிஞ்சும் அளவிற்கு தங்களது அடுத்த படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார்கள் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த விதத்தில் சல்மான் நடித்து விரைவில் வெளிவர உள்ள 'டியூப்லைட்' படத்தை உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவ்வளவு தியேட்டர்களில் திரையிடப்பட்டால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் 'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடிக்க முடியும் என்று நம்புகிறார்களாம்.
ஹிந்தியில் மட்டும் சுமார் 500 கோடி வசூலைத் தாண்டியுள்ள 'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்பதில் பாலிவுட் நடிகர்கள் ஆசைப்படுவது சரி, படமும் அந்த அளவிற்கு மிரள வைக்கக் கூடியதாக இருக்க வேண்டுமே...?.