இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
இந்திர குமார் இயக்கத்தில், சஞ்சய் தத் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் தமால் வரிசை படங்கள். ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மூன்றாம் பாகம் "டோட்டல் தமால்" என்ற பெயரில் உருவாக இருக்கிறது. இதில் முந்தைய பாகங்களில் நடித்த சஞ்சய் தத் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் இந்திர குமார் கூறியதாவது... "நான், அஜய், எனது பார்டனர் அசோக் மூவரது கூட்டணி அற்புதமானது. பாலிவுட்டில் கடந்த 20 ஆண்டுகளில் வெளியான படங்களில் மறக்க முடியாத ஒரு காமெடி படம் என்றால் அது எங்களது இஷ்க் படம் தான். தமால் படத்தின் அடுத்த பாகங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு இருக்கும். இப்போது இதில் அஜய்யும் இணைந்து இருப்பது ரொம்பவே ஸ்பெஷல்" என்று கூறியுள்ளார்.