போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாகுபலி-2 ஜூரம் இன்னும் குறையவில்லை. அதனால் பல படங்களின் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளன. பாலிவுட்டிலும் குறைவான படங்கள் தான் ரிலீஸாகியுள்ளன. நேற்று பாலிவுட்டில் அர்ஜூன் கபூர்-ஸ்ரத்தா கபூர் நடிப்பில் ஹாப் கேர்ள்பிரண்ட் படம் ரிலீஸாகியிருக்கிறது. இதேப்போன்று இர்பான் கான் - சபா ஓமர் நடிப்பில் ஹிந்தி மீடியம் படம் ரிலீஸாகியுள்ளது. இரண்டு படங்களில் ஹிந்தி மீடியம் படம் தான் ரசிகர்களிடத்திலும், விமர்சகளிடத்திலும் நல்ல பாராட்டை பெற்று வருகின்றன. ஆனால் வசூலை பொறுத்தமட்டில் ஹாப் கேர்ள்பிரண்ட் தான் முன்னணியில் இருக்கிறது. நேற்று வெளியான முதல்நாளில் ஹாப் கேர்ள்பிரண்டு படம் ரூ.10.27 கோடியும், ஹிந்தி மீடியம் படம் ரூ.2.81 கோடியும் வசூலித்துள்ளன.
சுமார் ரூ.48 கோடி பட்ஜெட்டில் உருவான ஹாப் கேர்ள்பிரண்ட் படம் சுமார் 2500 தியேட்டர்களிலும், ஹிந்தி மீடியம் படம் ரூ.23 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 1,100 தியேட்டர்களிலும் ரிலீஸாகியுள்ளன.