ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாலிவுட்டின் இளம் நடிகர் வருண் தவான். இவரது அப்பா டேவிட் தவான் இயக்குநர், அண்ணன் ரோகித் தவானும் இயக்குநர். ஆனால் வருண் மட்டும் இயக்கம் பக்கம் செல்லாமல், நடிகராகிவிட்டார். இருந்தாலும் அவருக்குள்ளும் இயக்குநர் ஆசை இருக்கிறது. ஆனால் இது இப்போதைக்கு நடக்காது என்கிறார்.
இதுப்பற்றி வருண் தவான் கூறியிருப்பதாவது... கேமராவிற்கு பின்னால் நின்று வேலை பார்க்க எனக்கு ஒன்றும் தயக்கமில்லை. இப்போதைக்கு நான் படம் இயக்குவேனா என்று தெரியவில்லை. இன்னும் 10 ஆண்டுகளுக்கு நிச்சயமாக படம் இயக்க மாட்டேன். ஆனால் ஒருநாள் கண்டிப்பாக படம் இயக்குவேன், அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
தற்போது வருண் தவான், ஜூட்வா-2 படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்., 29-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.