ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது முதல் ஹாலிவுட் படமாக பேவாட்ச் என்ற படத்தில் நடித்துள்ளார். பிரியங்காவுடன் டுவைன் ஜான்சன், ஜாக் எப்ரான் உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. தீபிகா நடித்த ஹாலிவுட் படமான டிரிபிள் எக்ஸ் படத்திற்காக நடிகர் வின் டீசல் இந்தியா வந்து படத்தை புரொமோஷன் செய்தார். ஆகையால் பேவாட்ச் படத்திற்காக நடிகர் டுவைன் ஜான்சனும் இந்தியா வருவார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர் வரமாட்டார் என்கிறார் பிரியங்கா சோப்ரா.
இதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறியிருப்பாதவது... ‛‛பேவாட்ச் படக்குழுவினர் இந்தியா வந்து படத்தை புரொமோஷன் செய்வார்களா...? என்று தெரியவில்லை. நிச்சயம் டுவைன் ஜான்சன், ஜாக் எப்ரான் இந்தியா வரமாட்டார்கள்'' என்று கூறியுள்ளார்.
பேவாட்ச் படம் வருகிற ஜூன் 2-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா, நெகட்டீவ் ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.