ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
உலகின் இரண்டாவது அழகி என்ற பெயரை பெற்றுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பின்னர் பாலிவுட் சென்றவர், அங்கு நம்பர்-ஒன் நடிகையாக உயர்ந்தார். தற்போது பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவை சேர்ந்த பஸ்நெட் என்னும் இணையதளம் உலகின் அழகான பெண்கள் யார் என்று ஆன்லைன் மூலம் ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலகின் சிறந்த 30 அழகிகளின் பெயர்களை அந்த நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பியான்ஸே நோலஸ் தான் உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தை இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார். இதை மிகழ்ச்சியுடன் தன் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார் பிரியங்கா. பிரியங்காவை தொடர்ந்து டெய்லர் ஹில், நடிகை எம்மா வாட்சன் மற்றும் டகோடா ஜான்சன் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் 6வது இடத்தை பெற்றுள்ளார்.
ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஏஞ்சலா ஜூலி 8-வது இடத்திலும், எம்மா ஸ்டோன் 12வது இடத்தையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமாவின் மனைவி மிக்செல் ஒபாமா 21-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.