ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் நடித்து அடுத்து வெளியாக உள்ள படம் ‛நூர்'. இப்படத்தில் சோனாக்ஷி, பத்திரிகையாளராக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சோனாக்ஷியிடம், நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருந்து சல்மானிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று விரும்பினால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த சோனாக்ஷி, ‛‛அனைவரும் கேட்க நினைக்கும், அடிக்கடி கேட்கும் கேள்வி தான். அது என்னவென்றால் எப்போது உங்களுக்கு(சல்மான்) திருமணம் என்பது தான். இருந்தாலும் அவரிடம் இந்த கேள்வியை கேட்க கொஞ்சம் பயமாக உள்ளது, ஏனென்றால் இந்த கேள்வியை கேட்டு அவரிடம் அடிவாங்க விரும்பவில்லை'' என்று கூறியுள்ளார். சோனாக்ஷி நடித்துள்ள ‛நூர்' படம் வருகிற ஏப்., 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது.