போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சிவம் நாயர் இயக்கத்தில் டாப்சி, மனோஜ் பாஜ்பாய் முக்கிய ரோலில் நடித்துள்ள படம் ‛நாம் சபானா'. இப்படத்தில் நடிகர் அக்ஷ்ய் குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். வருகிற மார்ச் 31-ம் தேதி படம் ரிலீஸாக இருப்பதால் படத்திற்கான புரொமோஷன் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷ்ய் குமாரும் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், ‛‛இந்த உலகத்தில் பெண்கள் தான் சிறந்த உளவாளிகள். இதை அனைத்து கணவன்மார்களும் ஒப்புக் கொள்ள தான் வேண்டும். பெண்கள் தங்களுக்குள்ளேயே ஒரு ஆண்டனாவை உருவாக்கும் திறன் படைத்தவர்கள். எப்படி தான் சில விஷயங்களை அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்த்த மாத்திரத்தில் சற்றென்று கண்டுபிடித்துவிடுவார்கள், டாப்சியும் கிட்டத்தட்ட அதே ரகம் தான்'' என்றார்.