ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
பாலிவுட்டின் முத்த மன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. முத்தக்காட்சி இல்லாமல் இவரது படங்களே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. இம்ரான் ஹாஸ்மி, சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‛கேப்டன் நவாப் என்ற படத்தை அறிவித்தார். இதன் படப்பிடிப்புகள் கடந்த டிசம்பர் மாதமே ஆரம்பிக்க இருந்தது. ஆனால் இப்போது வரை படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்படவில்லை. இம்ரான் ஹாஸ்மி, அஜய் தேவ்கனின் பாத்சாகோ படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இதற்காக மொத்தமாக கால்சீட் கொடுத்துவிட்டார். இதன் படப்பிடிப்புகள் முடியாததால், தனது படத்தை வெறும் அறிவிப்புடன் போட்டுவிட்டார். பாத்சாகோ படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. அதை முடித்ததும் தனது படத்தை ஆரம்பிக்க உள்ளார் இம்ரான்.