ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
நடிகர் முஸ்தபா, கியாரா அத்வானி நடிக்கும் படம் மிஷின். இப்படம் மார்ச் 17 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில், மோக்ரா படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான து சீச படி ஹை மஸ்து மஸ்து பாடலை ரீமேக் செய்து பயன்படுத்த, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டைரக்டர் அப்பாஸ் மஸ்தான் உறுதி செய்தார். அவர் அளித்த பேட்டியில், ஆம். து சீசு படி ஹை மஸ்து மஸ்து பாடலை இப்படத்தில் பயன்படுத்த உள்ளோம். புதிய பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை நடிகர் அக்ஷைகுமார் வெளியிட உள்ளார். அக்ஷைகுமார், தான் நடித்த பாடலின் மீள்உருவாக்கத்தையும் நாளை மும்பையில் நடக்கும் விழாவில் அவரே வெளியிட உள்ளார். து சீசு படி ஹை மஸ்து மஸ்து பாடலை மீண்டும் பயன்படுத்தம் எங்களின் முடிவை அக்ஷையிடம் கூறிய போது, அவர் மீகவும் சந்தோஷப்பட்டார். இந்த பாடலை வெளியிட தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் என்றார்.