ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். பாலிவுட்டில் இருக்கும் பல நடிகைகள், தென்னிந்தியாவில் ஒரு மொழியிலாவது நடித்து விடுவார்கள். ஆனால் பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கும் கரீனாவோ, இதுவரை ஒரு தென்னிந்திய படங்களில் கூட நடித்தது கிடையாது. இதற்கு என்ன காரணம்.? என்று நடிகை கரீனாவே கூறியிருக்கிறார்.
அதில், ‛‛தென்னிந்திய படங்களில் நல்ல கதையம்சம் இருக்கின்றன. இங்கு தலைசிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். பவன் கல்யாண் முதல் ரஜினிகாந்த் வரை பல திறமையான நடிகர்கள் உள்ளார்கள். தமிழ், மலையாளம் சினிமாக்களில் நல்ல வித்தியாசமான கதைகள் உள்ள படங்கள் வருகின்றன. இது நல்ல விஷயம். ஆனால் எனக்கு இங்குள்ள மொழிகள் தெரியாது, என்னிடம் உள்ள பெரும் குறையே இதுதான். ஆகையால் தான் என்னால் தென்னிந்திய படங்களில் நடிக்க முடியவில்லை'' என்று கூறியுள்ளார்.
கரீனா அடுத்தப்படியாக வீரே தி வெட்டிங் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது.