ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளும் பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, தற்போது சர்கார்-3 படத்தை இயக்கியுள்ளார். இதில் அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், அமித்சாத், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, மும்பையில் சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது படம் பற்றி பேசிய ராம் கோபால் வர்மா, ‛‛சர்கார்-3யில் ஹீரோவாவும் கிடையாது, வில்லனும் கிடையாது. எல்லா கேரக்டர்களும் சாதுவாகவும், வலிமையானவர்களாகவும் இருப்பார்கள். ஆகையால் இதில் ஒரு கேரக்டர் பாசிட்டீவ், இந்த கேரக்டர் நெகட்டீவ் என்று நாம் அளவிட்டு சொல்ல முடியாது'' என்று கூறியுள்ளார்.