இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தனது அடுத்த படமாக நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்கை வரலாற்றை படமாக இயக்கவிருக்கிறார். படத்தில் சஞ்சய் தத்தாக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கயிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பை துவக்க உள்ளார் ராஜ்குமார். இந்நிலையில் சஞ்சய் தத் அப்பாவான சுனில் தத் ரோலில் நடிகர் பரேஷ் ராவல் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
இதைப்பற்றி இயக்குநர் ராஜ்குமார் கூறியதாவது... "படத்தில் சுனில் தத்தாக பரேஷ் ராவல் நடிக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரன்பீர் கபூருக்கு நண்பனாக விக்கி கவுசல் நடிக்க இருக்கிறார். படத்தில் பத்திரிக்கையாளராக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். சோனம் கபூரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சஞ்சய் தத்தின் அம்மா நர்கிஸ் ரோலில் நடிக்க இன்னும் நடிகை முடிவாகவில்லை்'' என்று கூறியுள்ளார்.
சஞ்சய் தத்தின் வாழ்கை படம் நடிகர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள ‛டைகர் ஜிந்தா ஹே' படத்துடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.