விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
யூனிசெப் எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண துாதராக, ஹிந்தி நடிகை, பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். ஹிந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகை, பிரியங்கா சோப்ரா, 34; தற்போது, ஹாலிவுட் படங்களிலும் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில், உலகம் முழுவதும் குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வரும், யூனிசெப் எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியம், பிரியங்கா சோப்ராவை, சர்வதேச நல்லெண்ண துாதராக நியமித்துள்ளது. இந்த அமைப்பின், 70ம் ஆண்டு துவக்க விழா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இது குறித்து, பிரியங்கா சோப்ரா கூறியதாவது: குழந்தைகளின் சுதந்திரத்திற்காக, யூனிசெப் சிறப்பான பணிகளை செய்து வருகிறது; 10 ஆண்டுகளாக, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஐ.நா., நல்லெண்ண துாதராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சிஅளிக்கிறது. ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவும், நல்வாழ்வு வழங்கவும் பணியாற்றுவேன். குழந்தைகளுக்காக, மனிதநேயத்துடன் பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ஓர்லாண்டோ புளூம், ஜாக்கிசான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.