விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பிங்க் படத்தை தொடர்ந்து டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛நாம் சபானா'. சிவம் நாயர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் டாப்சி, முதன்மை ரோலில் நடிக்கிறார். ஆக்ஷ்ய் குமார் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் பேபி படத்தின் முந்தைய பாகம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை டாப்சி மறுத்துள்ளார். சமீபத்தில் இப்படம் பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛பேபி படத்திலிருந்து எனது கேரக்டர் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் சபானா படம் பேபி படத்தின் முந்தைய பாகமோ, அல்லது அதன் தொடர்ச்சியோ கிடையாது. இது ஒரு வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த கதை'' என்று கூறியுள்ளார். தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நாம் சபானா படம், அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி ரிலீஸாக உள்ளது.