சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய சினிமாவிலும் பேசப்படும் நடிகையாகி விட்டார் ராதிகா ஆப்தே. ஆனபோதும் தமிழில் புதிய படம் உடனடியாக கமிட்டாகாத நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் தலா இரண்டு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் பொம்பாய்ரியா என்ற இந்தி படத்தில் அவர் அரை நிர்வாண காட்சியில் நடித்திருப்பதாக ஹாட் நியூஸ் ஒன்று போட்டோவுடன் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
மைக்கேல் ஈவார்ட் என்பவர் இயக்கும் அந்த படத்தில் ஒரு ஹோலி பண்டிகை கொண்டாட்ட காட்சி உள்ளதாம். அந்த காட்சியில் தோழிகள் பலரும் ராதிகா ஆப்தே மீது பலவிதமான வண்ண பவுடர்களை பூசி விடுவார்களாம். அதை யடுத்து உடம்பிலுள்ள கலர் பவுடர்களை நீக்க பாத்ரூம் சென்று தண்ணீரை கொண்டு அப்புறப்படுத்துவாராம். ஆனால் அந்த காட்சியில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்திருப்பதாக செய்தி பரவியதை அடுத்து, அந்த காட்சியில் நிர்வாணமாக நடிக்கவில்லை, மேலாடை அணியாமல் மட்டுமே ராதிகா ஆப்தே நடித் திருப்பதாக அப்பட டைரக்டர் செய்தி வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.