ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஹாலிவுட்டில் வெற்றியில் வசூலை குவித்த படங்களில் ‛செப்' படமும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் இப்படத்தை பாலிவுட்டில் ரீ-மேக் செய்ய போவதாகவும் , இதில் சைப் அலிகான் முக்கிய ரோலில் நடிக்கயிருக்கிறார் என்றும் கூறப்பட்டது .ஆனால் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிப் போடப்பட்டது. தற்போது ‛ஏர்லிப்ட்' படத்தை இயக்கிய ராஜா கிருஷ்ணா மேனன் ‛செப்' படத்தை இயக்குகிறார். சமீபத்தில் ‛செப்' படக்குழுவினார் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார்கள்
‛செப்' படத்தை தயாரிக்கும் டி சீரிஸ் நிறுவனம் படத்தின் அறிவிப்பு தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறது. இதைப்பற்றி டி சீரிஸ் கூறியதாவது...." ‛செப்' படத்தில் சைப் அலிகான் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை14 ரிலீசாக இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
சைப் அலிகான் மற்றும் படத்தின் இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனன் இருவரும் படத்தின் படப்பிடிப்பை கொச்சியில் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சைப் அலிகான் தற்போது நடித்து வரும் ‛ரங்குன்' படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது