‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபகாலமாக ஹாலிவுட் செல்லும் இந்திய நடிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பாலிவுட்டில் சிறந்த நடிகரான நவாசுதீன் சித்திக்கிடம் தங்களுக்கு ஹாலிவுட் செல்லும் ஆசை இருக்கிறதா என்று கேட்டபோது, தனக்கு அப்படியொரு ஆசையில்லை என்று கூறினார். இதுப்பற்றி நவாசுதீன் கூறியிருப்பதாவது... ‛‛இங்கேயே நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இங்கு அனுராக் காஷ்யாப் போன்ற திறமையானவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ராமன் ராகவ், கேங்ஸ் ஆப் வசீப்பூர், மிஸ் லவ்லி, தி லன்ஞ்ச் பாக்ஸ் போன்ற தரம்வாய்ந்த படங்கள் வருகின்றன, பிறகு ஹாலிவுட்டிற்கு போக வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.