‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயின்களில் சோனம் கபூரும் ஒருவர். தற்போது வீரா தி வெட்டிங்' படத்தில் சோனம் கபூர், கரீனா கபூர் மற்றும் ஸ்வர பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். சமீபத்தில் சோனம் டில்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனமிடம் பத்திரிக்கையாளர்கள் வீரா தி வெட்டிங்' படத்தில் கரீனா நடிப்பாரா என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த சோனம்....." வீரா தி வெட்டிங்' படத்தில் கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் தலைப்பு வீரா தி வெட்டிங்' இல்லை வீரா தி ஷாதி' என்று மாற்றப்பட்டு உள்ளது. படப்பிடிப்பு டில்லியில் தான் எடுக்க போகிறார்கள். கரீனா நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் எடுக்கப்படும்" என்று கூறினார்.