‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
லண்டன்:உலகின் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில், டாப் 20 இடங்களில், இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகர்கள், நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், 220 கோடி ரூபாய் வருமானத்துடன், நடிகர் ஷாருக் கான், எட்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை, உலகின் அனைத்து தரப்பு நடிகர்களின் வருமானத்தின் அடிப்படையில், அதிக வருமானம் ஈட்டும் நடிகர்களின் பட்டியலை, போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2016ம் ஆண்டுக்கான, அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியல், தற்போது வெளியாகி யுள்ளது.
இந்த பட்டியலில்,முதல், 20 இடங்களுக்குள், இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷ்ய் குமார், சல்மான் கான் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உலகின் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில், பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக் கான், 220 கோடி ரூபாய் வருமானத்துடன், 8ம் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, 205 கோடி ரூபாய் வருமானத்துடன் அக்ஷ்ய் குமார், 10வது இடத்தையும், 184 கோடி ரூபாய் வருமானத்துடன் சல்மான் கான், 14வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேப்போல், 70 வயதை கடந்த நிலையிலும், திரையுலகில் மின்னும் நட்சத்திரமாய் விளங்கும் அமிதாப் பச்சன், 130 கோடி ரூபாய் வருமானத்துடன், அந்த பட்டியலில், 20ம் இடத்தை பிடித்துள்ளார். பாலிவுட் நடிகர்கள் மட்டுமின்றி, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், 66 கோடி ரூபாய் வருமானத்துடன், உலகின் அதிக வருமானம் ஈட்டும் நடிகையர் பட்டியலில், 10ம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.