ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் சைப்அலிகான், ஷாகித்கபூர், கங்கனாரணாவத் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரங்கூன்'. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் செப்.,30ம் தேதி ரிலீஸாவதாக முன்பு தகவல் வெளியானது, ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் அடுத்தாண்டுக்கு தள்ளிப்போய் உள்ளது. அதன்படி, 'ரங்கூன்' படம் 2017, பிப்.24ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் விஷூவல் எபெக்ட்ஸ் காட்சிகள் இருப்பதால் அதற்கான பணிகள் தாமதமாகும் என்று படக்குழு கருதுகிறது, அதனாலேயே படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள்.
இதனிடையே 'ரங்கூன்' படம் பிப்.,24ம் தேதி வெளியாவது கங்கனாவை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஏனென்றால் கங்னாவின் முந்தைய படமான 'தனு வெட்ஸ் மனு' படம் இதே தேதியில் தான் வெளியானது. அந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் அதே சென்ட்டிமென்ட், 'ரங்கூன்' படத்திற்கும் ஒர்க்-அவுட்டாகும் என எதிர்பார்க்கிறார்.