ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாலிவுட்டின் திறமையான நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். இவர் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் வித்யாபாலன் கூறிய கருத்து ஒன்று சித்தார்த் ராயை அப்செட்டாக்கியுள்ளது. அப்படி என்ன சொன்னார் வித்யா.? அவர் நடித்துள்ள டீன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது, கங்கனாவிற்கு எனது ஆதரவு, அவர் தனக்காக போராடுகிறார் என்கிற தோணியில் கூறியிருந்தார் வித்யாபாலன். இந்த கருத்து தான் இப்போது சித்தார்த்தை அப்செட்டாக்கியுள்ளது. இந்த கருத்திற்கு, சித்தார்த் அப்செட்டாவதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். அதாவது, சித்தார்த் ராய்கபூர் டிஸ்னி இந்தியாவின் தலைமை அதிகாரியாக இருக்கிறார் அல்லவா.?, இந்த நிறுவனம் தான் ஹிருத்திக் நடிக்க உள்ளா காபில் படத்தை ராகேஷ் உடன் இணைந்து இவர் தயாரிக்க உள்ளது. அப்படிப்பட்ட ஏற்கனவே ஹிருத்திக்கிற்கும், கங்கனாவிற்கும் பிரச்னை நடந்து வரும்நிலையில், வித்யாபாலன், கங்கனாவிற்கு ஆதரவு தெரிவிப்பது போன்று பேசியிருப்பதால் இதன்காரணமாக ஏதேனும் பிரச்னைகள் வருமா.? என்று யோசிக்கிறாராம் சித்தார்த் ராய்கபூர்.