இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் வெற்றிக்கு பிறகு சல்மான்கானும், கபீர்கானும் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணுகிறார்கள். இப்படத்திற்கு தற்காலிகமாக 'டியூப் லைட்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் சல்மான் ஜோடியாக தீபிகா படுகோனேவை நடிக்க கேட்டனர். அவரும் கதையை எல்லாம் கேட்ட பின்னர் தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி நடிக்க மறுத்துவிட்டாராம்.
இதுப்பற்றி விசாரித்தபோது... இயக்குநர் கபீர்கானிடம், தீபிகா தனக்கான கேரக்டரை இன்னும் வலுப்படுத்துமாறு கூறியுள்ளார். அதோடு மட்டுமல்ல சல்மானுக்கு நிகராக தன்னுடைய ரோலும் இருக்க வேண்டும், அதற்கு ஏற்றபடி கதையில் மாற்றம் செய்யுங்கள் என்று கூறினாராம். ஆனால் இயக்குநர் மறுக்கவே இப்படத்திலிருந்து தீபிகா விலகிவிட்டதாக கூறப்படுகிறது.