பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர், திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள கி அண்ட் கா படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தப்படியாக அவர் உத்தா பஞ்சாப் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் டாக்டராக நடிக்கிறார். கரீனா டாக்டராக நடிப்பது முதன்முறையல்ல, ஏற்கனவே 3 இடியட்ஸ், ஏஜென்ட் வினோத் போன்ற படங்களிலும் டாக்டராக நடித்துள்ளார்.
உத்தா பஞ்சாப் படத்தில் நடிப்பது பற்றி கரீனா கபூர் கூறியிருப்பதாவது... ‛‛இப்படத்தில் நான் டாக்டராக நடிக்கிறேன், மிகவும் அருமையான ரோல், இதுபோன்ற ரோலில் நடிப்பது பிடித்திருக்கிறது. மொத்தத்தில் இந்தப்படத்தில் எனக்கு ஒரு சிறப்பான வேடம் என்பதுடன் ஒரு வித்தியாசமான ரோல் என்று கூறியுள்ளார்.
அபிஷேக் சாபே இயக்கும் இப்படத்தில் கரீனா கபூருடன் ஷாகித் கபூர், ஆலியா பட், தில்ஜித் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.