‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விமான கடத்தல்காரர்களிடமிருந்து பயணிகளை காப்பாற்றிய விமான பணிப்பென் நீர்ஜா கேரக்டரில் சோனம் கபூர், நடித்திருக்கும் நீர்ஜா படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பில் மகிழ்ச்சியில் இருக்கிறார் சோனம் கபூர். தற்போது அவர் தங்கை ரியாவுடன் இணைந்து மும்பையில் பேஷன் ஷோரும் ஒன்றை திறப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
இது ஒரு ஹை ட்ரீட் பேஷன் ஷோரூம், இங்கு ஆடைகள் ரெடிமேடாக கிடைக்காது அவரவர் அளவிற்கேற்ப டிசைன் செய்தே தரப்படும். 400 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம். ஏப்ரல் மாதம் திறக்க இருக்கிறார்.
"நான் மாடல் பெண் கிடையாது. எனக்கு பொதுவான ஆடைகள் பொருந்தாது. தனியாக டிசைன் செய்ய வேண்டும். அப்படித்தான் நம் நாட்டில் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள். பிரத்யேகமாக டிசைன் செய்ய முடியாமல் யாருடைய அளவிற்கோ டிசைன் செய்த உடைகளை அணிகிறார்கள். அப்படி இனி யாரும் அணியக்கூடாது தங்களுக்கென்று பிரத்யேமாக தயாராகும் ஆடைகளையே அவர்கள் அணிய வேண்டும். அதற்கு உதவி செய்யும் வகையில்தான் இந்த ஷோரூமை உருவாக்கி வருகிறேன்" என்கிறார் சோனம் கபூர்.