மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் வருண் தவான். தற்போது இவர் ஷாரூக்கான் உடன் ''தில்வாலே'' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் டிச.18ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகை கஜோலும் நடித்துள்ளார். சமீபத்தில் வருண் தவானிடம், கஜோல் உடன் நடித்துவிட்டீர்கள் அடுத்தப்படியாக எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த வருண், நான் இயக்குநர் சொல்வதை கேட்பவன், அவர்கள் தான் யார் ஹீரோயின் என்று முடிவு செய்வார்கள். என்னுடன் எந்த நடிகை நடிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்வது கிடையாது. 30 வயதுக்கு மேல் உள்ள நடிகையுடன் மல்டி ஸ்டாரர் படத்தில் நடிக்க ஆசை. ஆனாலும் எனக்கு ப்ரீத்தி ஜிந்தா, கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கூறியுள்ளார்.