ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நடிகர் ஷாகித் கபூர், தற்போது ஷாந்தார் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையே அவரது மனைவி மிரா பற்றி கூறும்படி கேட்டோம். அப்போது அவர் கூறுகையில், புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது எனது மனைவியும் நானும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வோம். அது எங்களிடம் உள்ள நல்ல விஷயம். அது தான் ஒவ்வொரு மனிதனையும் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும். மிரா என்னை எல்லோருக்கும் பிடித்த ஒருவனாக மாற்றி உள்ளார். அவரது நல்ல பண்பை அது காட்டுகிறது என்றார். மிராவை மனைவியாக அடைந்ததும், அவருடன் நேரம் செலவிடுவதும் தனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி எனவும் ஷாகித் தெரிவித்துள்ளார். ஷாகித்தின் ஷான்தார் படம் அக்டோபர் 22ம் தேதி ரிலீசாக உள்ளது.