குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் சிங் இஸ் பிலிங். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தில் பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோனும் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தது. ஆமாம் அவர் நடிப்பது உண்மை தான். ஆனால் அவருக்கு பெரிய ரோல் எல்லாம் கிடையாது. படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தான் அவர் வருகிறார். அதுவும் மும்பை விமான நிலையத்தில் அவர் வருவது போன்ற காட்சிதானாம். அக்ஷ்ய்-சன்னி இடையே ஒரு பேச்சுவார்த்தை கூட அந்த காட்சியில் கிடையாது என்கிறார்கள். சிங் இஸ் பிலிங் படம் முழுக்க முழுக்க குடும்ப பாங்கான படமாக உருவாகி வருகிறது. இப்படம் அடுத்தமாதம் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.