Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட் படங்களுக்கு ஹாலிவுட் படங்களே போட்டி : அக்ஷய் குமார்

10 ஆக, 2015 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Akshay-Kumar-speaks-about-Brothers-movie

இந்தியாவிலேயே, மிகப்பெரிய பட்ஜெட்டில் பாகுபலி படம் எடுக்கப்பட்டிருக்கும் போதிலும், தன்னைப்பொறுத்தவரை, பாலிவுட் படங்களாக போட்டி என்றால், அது ஹாலிவுட் படங்கள் தான் என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.


பேபி, கப்பார் இஸ் பேக் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அக்ஷய் குமார் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் பிரதர்ஸ். பிரதர்ஸ் படம், முந்தைய வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்று பலர் ஆரூடம் தெரிவித்து வரும் நிலையில், அந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து அக்ஷய் குமார் நம்முடன் பகிர்ந்துகொண்டவைகளில் சில....


பிரதர்ஸ் படம் குறித்து....


இரண்டு சகோதரர்களுக்கு இடையேயான கதைக்களமே, பிரதர்ஸ் படம். இது சண்டைப்படம் தான், ஆனால் உணர்ச்சிகரமானது. படத்தை பார்த்து பெண்கள் மட்டுமே அழுவார்கள் என்பது உண்மையல்ல. உணர்ச்சிகரமான காட்சிகளை பார்த்து அழும் ஆண்கள் கூட இருக்கிறார்கள். இந்த படம் குறித்து ஒருவரியில் சொல்லவேண்டுமென்றால், ஆண்களை கவரும் ஆண்களுக்கான படம் என்பதே.....


இந்த படத்திற்காக, எந்த வகையில் தயாரானீர்கள்?


இந்த படத்தில், நானும் சித்தார்த்தும் நடித்திருக்கிறோம்..இந்த படத்திற்காக, தெருச்சண்டையை, 5 மாதங்களுக்கும் மேலாக கற்றுக்கொண்டோம். இதற்காக, தினமும், 15 நிமிடங்கள் ஐஸ்குளியலை மேற்கொண்டோம்.. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை உண்மைத்தன்மை நிறைந்திருக்கும். படம் பார்க்கும்போது அது உங்களுக்கே தெரியும். என்னுடைய திரைவரலாற்றில், பிரதர்ஸ் படம், மிகச்சிறந்த ஆக்ஷன் படமாக இருக்கும்.




ஜாக்கி ஷெராப்பின் கேரக்டர் குறித்து...


எனது மற்றும் சித்தார்த்தின் தந்தை கேரக்டரில், ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு சண்டைக்காட்சிகள் இல்லை என்றபோதிலும், மிக முக்கியமான கேரக்டர் அவருக்கு....படத்தின் கதையே, இந்த மூவரை சுற்றியே பின்னப்பட்டுள்ளது. ஏழை குடும்பத்தின் தலைவராக ஜாக்கி ஷெராப் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு மகன் போதுமென்று நினைக்கும் வேளையில், அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து விடும். ஜாக்கி ஷெராப்பின் கேரக்டர் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.


சித்தார்த் உங்களுக்கு ஈடு கொடுத்து நடித்தாராமே....


நிச்சயமாக.... சித்தார்த், பாலிவுட் திரையுலகிற்கு புதுமுகம் என்றாலும், நிறைய திறமைகள் அவருக்கு உண்டு. அவரது நடிப்பை பார்த்தால், சீனியர் நடிகர் என்றே நினைக்கத்தோன்றும். அவரின் நடிப்பைப்பார்த்து நானே ஒரு சமயம் பிரமித்துப்போய்விட்டேன். நாங்கள் இருவருமே, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்குள் கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது.


உங்களுக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்துள்ளார். அவர் குறித்து...


பிரதர்ஸ் படம் ஆக்ஷன் படம் தான் என்றாலும், இதிலும் ரொமான்ஸ் டிராக் உள்ளது. இதில், எனக்கு ஜோடியாக, ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்துள்ளார். இந்த படத்தில், நான் பெண் குழந்தையின் தந்தை கேரக்டரில் நடித்துள்ளேன். என் குடும்பத்திற்காக, நான் எத்தகைய செயலையும் செய்ய தயங்கமாட்ட்னே. இந்த படத்தை பார்த்தபிறகு, அனைவருக்கும் தங்கள் குடும்பத்தின் மீது தனிப்பட்ட பாசம் ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.


கதை தான் ராஜா.. என்பது சரிதானே?


கதை நான் நிச்சயம் படத்தின் வெற்றிக்கு காரணம் என்பதில் எள்ளளவும் சந்தேகமுமில்லை. குறைந்த பட்ஜெட்டில், சிறந்த கதையம்சம் கொண்ட படமே, வசூலில் பெரும் சாதனை எல்லாம் படைத்துள்ளது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. நாங்கள் போட்டியாக கருதுவது ஹாலிவுட் படங்களையே அன்றி, இந்திய படங்களை அல்ல....


பிரதர்ஸ் படம் ரிலீசாக உள்ளது எவ்வாறு உணர்கிறீர்கள்?


பிரதர்ஸ் படம் விரைவில் ரீலீசாக உள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில், நான் மாறுபட்ட லுக்கில் தோன்றியுள்ளேன். இந்த படத்தில், நீங்கள் என்னை பார்ப்பதை காட்டிலும், சித்தார்த்தை பாருங்கள். ஏனெனில், அவருக்கு முதல் ஆக்ஷன் படம் இது. குறைந்த பட்ஜெட்டில் சிறந்த கதையுடன் எடுக்கப்பட்டுள்ள தரமான படம் என்று அக்ஷய் குமார் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in