மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' |
அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடித்த தோல்விப் படமான 'ஷமிதாப்' படத்திற்குப் பிறகு பால்கி இயக்க உள்ள புதிய படத்திற்கு 'கி கா' என பெயரிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், கரினா கபூர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
கரினா கபூர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் வேலைக்குச் செல்பவராகவும், அவருடைய கணவரான அர்ஜுன் கபூர் வீட்டில் சமைக்கும் வேலையைப் பார்க்கும் 'ஹவுஸ்-ஹஸ்பென்ட்' ஆக நடிக்கப் போவதாகவும் தெரிகிறது. இதற்காக கரினா கபூருக்கு பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்கோத்ரா தனி கவனம் செலுத்து அவருடைய தோற்றத்தை உருவாக்க உள்ளாராம்.
இந்தப் படத்தின் டைட்டில் பற்றிய தகவலை படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம் தன்னுடைய டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பால்கியின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாதான் இசையமைக்க உள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.