‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஓ காதல் கண்மணி. ராவணன், கடல் படங்களின் தோல்வியை தொடர்ந்து, அதிலிருந்து மீளும் பொருட்டு, குறுகிய கால அளவில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ஓ காதல் கண்மணி படம் பெரும்வெற்றி பெற்றது. கோலிவுட்டில் வெற்றி பெற்ற இப்படம், விரைவில் பாலிவுட்டிலும் ரீ்மேக் ஆகி வெளியாக உள்ளது. இந்த படத்தில், துல்கர் சல்மானின் கேரக்டரில் ஆதித்யா ராய் கபூரும், நித்யா மேனன் கேரக்டரில் சோனாக்ஷி சின்காவும் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.