‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரியா சென். இவர், மாஜி இந்தி ஹீரோயின் மூன்மூன் சென்னின் மகள் ஆவார். தொடர்ந்து பிரஷாந்த்துடன் குட்லக், அர்ஜூனுடன் அரசாட்சி போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லை. இதனால் இந்தி திரையுலகிற்கு சென்றார். அங்கு பல படங்களில் நடித்து பிரபலமானார் ரியாசென்.
ரியாசென், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது தாயுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு திடீரென இவர்களது வீடு தீப்பிடித்தது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த இருவரும் தீ பரவுவதை பார்த்து அலறியடித்து வௌியே வந்தனர். கட்டில், மெத்தை, உள்ளிட்ட பொருட்களிலும் தீப்பிடித்தது. மேலும் தீ பக்கத்து வீட்டிற்கும் பரவியது. பின்னர் விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ரியா சென்னும் அவரது தாய் மூன்மூன் சென்னும் உயிர் தப்பினர்.