‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஷாரூக்கான் நடித்து வரும் ஃபேன் படம் பக்ரீத் திருநாளில் ரிலீஸாக இருக்கிறது. ஹேப்பி நியூ இயர் படத்திற்கு பிறகு ஷாரூக்கான் நடித்து வரும் படம் ஃபேன். மனீஷ் சர்மா இயக்கும் இப்படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். ஃபேன் படத்தில் ஷாரூக்கான் ஒரு நடிகராகவும், ரசிகராகவும் நடிக்கிறார். பாலிவுட்டில் பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களில் தான் ரிலீஸாகும். இப்போதே அனேக பண்டிகைகளில் பல பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாரூக்கானின் பேன் படமும் ஆரம்பிக்கும்போதே ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது பக்ரீத் திருநாளில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.